ஆப்நகரம்

‘வனமகன்’ சாயிஷாவுக்கு குவியும் வாய்ப்புகள்!

‘வனமகன்’ படத்தில் நடித்து வரும் சாயிஷா சைகலுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

TNN 18 Jun 2017, 12:42 pm
‘வனமகன்’ படத்தில் நடித்து வரும் சாயிஷா சைகலுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
Samayam Tamil vanamagan sayesha saigal got more offers
‘வனமகன்’ சாயிஷாவுக்கு குவியும் வாய்ப்புகள்!


இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வனமகன்’. இந்த படம் மூலம் நடிகை சாயிஷா சைகல் தமிழில் அறிமுகமாகிறார். படத்தின் நாயகனாக ஜெயம் ரவி நடித்துள்ளார். ‘வனமகன்’ படத்தில் சாயிஷாவின் நடனம் அனைவரின் பாராட்டுகளை பெற்றுள்ளது. இவர் தெலுங்கு, இந்தியில் தவறவிட்ட வாயப்புகளை தமிழில் விடக்கூடாது என்பது தெளிவாக உள்ளார்.

மேலும் வனமகன் படத்தில் ஜெயம் ரவியை விட சாயிஷாவுக்கு தான் அதிக வசனங்கள் உள்ளது. இதன் மூலம் தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இதனிடையே பிரபுதேவா இயக்கத்தில் விஷால், கார்த்தி நடிக்கும் படம் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தில் சாயிஷா சைகல் நடிக்கிறார். இது தவிர 3 படங்களில் நடிக்க இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் சாயிஷா சைகல்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்