ஆப்நகரம்

தைரியமா இரு, நாங்க இருக்கோம்: முகென் ராவுக்கு பிக் பாஸ் பிரபலங்கள் ஆறுதல்

தந்தையை இழந்து வாடும் முகென் ராவுக்கு பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ஆறுதல் கூறியுள்ளனர்.

Samayam Tamil 29 Jan 2020, 9:51 am
தந்தையை இழந்து வாடும் முகென் ராவுக்கு பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ஆறுதல் கூறியுள்ளனர்.
Samayam Tamil vanitha cheran meera mithun console mugen rao
தைரியமா இரு, நாங்க இருக்கோம்: முகென் ராவுக்கு பிக் பாஸ் பிரபலங்கள் ஆறுதல்


முகென் ராவ்

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மலேசியாவை சேர்ந்த பாடகர் முகென் ராவின் தந்தை பிரகாஷ் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரின் இறுதிச்சடங்கு நேற்று மலேசியாவில் நடந்தது. முகென் ராவின் தந்தை மரணம் அடைந்தது குறித்து அறிந்த ரசிகர்களும், பிக் பாஸ் பிரபலங்களும் அவருக்கு தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளதுடன், ஆறுதலும் கூறி வருகிறார்கள்.

மீரா மிதுன்

தைரியமாக இரு முகென் ராவ். அனைத்தும் ஒரு காரணத்திற்காகத் தான் நடக்கிறது. உனக்காக நான் இருக்கிறேன். என்னை எப்பொழுது வேண்டுமானாலும் அழைக்கலாம். நீ ஜெயிக்க பிறந்தவன் என்று மீரா மிதுன் ஆறுதல் கூறியுள்ளார்.

Twitter-Meera Mitun

வனிதா விஜயகுமார்

முகென் ராவ் மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உன் இழப்பை அறிந்து வருத்தப்பட்டேன்.. குடும்பத்தில் ஏற்படும் மரணத்தால் மொத்த வாழ்க்கையும் மாறும்.. தைரியமாக இரு என்று வனிதா விஜயகுமார் ட்வீட் செய்துள்ளார்.

Twitter-Vanitha Vijaykumar

சேரன்

தந்தை மீது அளவற்ற காதல், அவர் கனவை நிறைவேற்ற துடித்த உன் முயற்சிகள், தந்தை உனக்களித்த பரிசுதான் உன் பாடும் திறன்.. அனைத்தும் அறிவேன் தம்பி.. உன் பிக்பாஸ் வெற்றிகூட உன் தந்தையின் சந்தோசத்திற்காக நிகழ்ந்ததாகவே இப்போது உணர்கிறேன்.. ஆழ்ந்த அனுதாபங்கள் தம்பி. #MugenRao என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் சேரன்.

Twitter-Cheran 👑 ʀᴀᴊᴀᴠᴜᴋᴋᴜ ᴄʜᴇᴄᴋ 👑

அடுத்த செய்தி

டிரெண்டிங்