ஆப்நகரம்

வனிதா குறித்து அவரது மகன் கூறிய 'ஒத்த' வார்த்தை: ஆடிப்போன ரசிகர்கள்..!

வனிதா குறித்த நெட்டிசனின் கேள்விக்கு அவரது மகன் ஸ்ரீஹரி அளித்துள்ள பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 25 May 2022, 6:15 pm
நடிகை வனிதா விஜயகுமார் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு சின்னத்திரையிலிருந்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதனை தொடர்ந்து சினிமாவிலும் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் வனிதா குறித்து அவரது மகன் அளித்துள்ள பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது..
Samayam Tamil Vanitha_Vijayakumar
Vanitha_Vijayakumar


பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே பல சர்ச்சைகள் வனிதாவை சுற்றி அரங்கேறின. அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் வலைத்தளத்தில் பலரும் பதிவுகள் பகிர்ந்து வந்தனர். அதன்பின்னர் பிக்பாஸில் இருந்து வெளிய வந்த பிறகு குக் வித் கோமாளி, கலக்கப்போவது யார்? பிக்பாஸ் ஜோடிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

சினிமாவிலும் நடித்து வரும் வனிதா யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். வனிதாவிற்கு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி பின்னர் அந்த இரண்டு திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அதன்பின்னர் பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு பின்னர் அவரையும் விட்டு பிரிந்தார். தற்போது தனது மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார் வனிதா.

இவரது மகன் ஸ்ரீஹரி தன் தாத்தா விஜயகுமார் உடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் வனிதாவின் மகன் ஸ்ரீஹரி கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது 21 ஆம் ஆண்டு பிறந்தநாளை கொண்டாடினார். தனது மகனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து உருக்கமான பதிவு ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார் வனிதா.

பிரபல நடிகை பலாத்கார வழக்கில் அரசியல் தலையீடு: பரபரப்பு மனு தாக்கல்.!
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் ஸ்ரீஹரியிடம் ‘ வனிதாவோட பையனா நீங்க’ என்று கேட்டார். இதற்கு ஸ்ரீஹரி ‘நான் ஆகாஷோட பையன் ப்ரோ’ என்று பதில் கூறியுள்ளார். மகனுக்கு உருகி உருகி வனிதா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், ஸ்ரீஹரி இவ்வாறு கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்