ஆப்நகரம்

hbdarunvijay உங்களுக்கு பிடிக்கிதோ, இல்லையோ 'ஐ லவ் யூ': அண்ணன் அருண் விஜய்யை வாழ்த்திய வனிதா

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தன் சகோதரர் அருண் விஜய்க்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் வனிதா விஜயகுமார்.

Samayam Tamil 19 Nov 2019, 3:53 pm
வனிதா விஜயகுமாருக்கும் அவரது அப்பா, சகோதரர் அருண் விஜய், சகோதரிகளுக்கு இடையே பிரச்சனை என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் அண்ணன் அருண் விஜய்க்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் வனிதா.
Samayam Tamil vanitha vijayakumar


அண்ணனை வாழ்த்தி வனிதா ட்வீட்டில் கூறியிருப்பதாவது,

கருத்து வேறுபாடுகளை தீர்த்துக் கொள்ளலாம். ஒரு வாழ்க்கை ஒரு குடும்பம் ஒரே ரத்தம். நீங்களும், நானும் வெவ்வேறு விதமாக பயணிக்கலாம் ஆனால் ஒன்றாகத் தான் துவங்கினோம். நம் குடும்பத்தை பெருமையடையச் செய்ய வேண்டும். #HBDArunVijay உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ ஐ லவ் யூ என்று தெரிவித்துள்ளார்.



வனிதா வாழ்த்தியுள்ளதை பார்த்தவர்கள் தெரிவித்திருப்பதாவது,

புது சேனல் துவங்கிய வனிதா: இருக்கு, இனி செம என்டர்டெயின்மென்ட் இருக்கு

அக்கா கோபக்காரி தான் ஆனால் நல்ல மனசுக்காரி. பழசை எல்லாம் மறந்து வனிதாவை ஏற்றுக் கொள்ளுங்கள் அருண் விஜய். ஆயிரம் தான் இருந்தாலும் தங்கச்சி இல்லை என்று ஆகிவிடுமா?. அவரை மன்னித்துவிடுங்கள்.

நீங்கள் வருத்தப்பட வேண்டாம் அக்கா. சொந்தம் நம்மை விட்டு எங்கு போய்விடப் போகிறது?. என்னக்கா இது புது பெர்ஃபாமன்ஸ், பட வாய்ப்புக்கு அடிபோடுகிறீர்களா? என்று தெரிவித்துள்ளனர்.

இப்போ, உடம்புக்கு பரவாயில்லையா தல?: நலம் விசாரிக்கும் அஜித் ரசிகர்கள்

வனிதா புது யூடியூப் சேனல் துவங்கியுள்ளார். மேலும் படம் தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அவரை தேடி வரும் பட வாய்ப்புகளை அவர் ஏற்கவில்லை. குழந்தைகளுடன் நேரம் செலவிட ஏதுவான விஷயங்களில் மட்டுமே தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்