ஆப்நகரம்

ரூ.25 லட்சம் செலவு செய்து பிறந்தநாள் விருந்து கொடுத்த சிம்பு: வருத்தத்தில் சென்ற நடிகர்கள்!

நடிகர் சிம்பு, தன்னுடைய பிறந்த நாளுக்காக ரூ.25 லட்சம் செலவு செய்தும், தங்களை சரியாக கவனிக்கவில்லை என்று கூறி நடிகர்கள் பலரும் வருத்தத்தில் சென்றுள்ளனர்.

Samayam Tamil 6 Feb 2019, 5:59 pm
நடிகர் சிம்பு, தன்னுடைய பிறந்த நாளுக்காக ரூ.25 லட்சம் செலவு செய்தும், தங்களை சரியாக கவனிக்கவில்லை என்று கூறி நடிகர்கள் பலரும் வருத்தத்தில் சென்றுள்ளனர்.
Samayam Tamil Sibu


நடிகர் சிம்புவின் பிறந்தநாள் விழா 3ம் தேதி கொண்டாடப்பட்டது.பிப்ரவரி 2ம் தேதி இரவில் தொடங்கிய பிறந்தநாள் விருந்து நிகழ்ச்சி 3ம் தேதி விடியும் வரை களைகட்டியது. இந்தவிழாவிற்கு யுவன்ஷங்கர்ராஜா, தனுஷ், ஜெயம்ரவி, ஆர்யா, சரத்குமார், ராதிகா, மகத் மற்றும் பிக்பாஸ் குழு உட்பட பலர் வந்திருந்தனர்.

இரவு பத்து மணிக்கே எல்லோரும் வந்து விட்டனர். ஆனால், நடிகர் சிம்பு மட்டும் 11.50க்குத் தான் வந்தாராம். சரியாக 12 மணி அடிக்கும்போது கேக் வெட்டினாராம். சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே சிம்பு அங்கிருந்தாராம். மீண்டும் தன்னுடைய அறைக்குள் சென்றுவிட்டாராம். இதைப் பார்த்த சரத்குமார், ராதிகா உள்ளிட்ட பலரும் கோபமாகிவிட்டார்களாம். நம்மை வரச்சொல்லிவிட்டு இவர் வெளியே போய்விட்டாரே என்று பலரும் வருத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் கடைசிவரை சிம்பு விருந்து நடந்த அரங்குக்கு வரவேயில்லை என்கிறார்கள்.

அதனால் அவருடைய நெருங்கிய நண்பர்கள் தவிர மற்றவர்கள் உடனே கிளம்பிப் போய்விட்டனராம். சுமார் 25 இலட்சம் செலவு செய்து பிறந்தநாள் விருந்து நடத்திய சிம்பு, அங்கு கூட சரியான நேரத்துக்கு வரவில்லை, விருந்தினர்களைச் சரியாக உபசரிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.\

அடுத்த செய்தி

டிரெண்டிங்