ஆப்நகரம்

படப்பிடிப்பின் போது இயக்குனரை நக்கலடித்த வரலட்சுமி சரத்குமார்!

‘சத்யா’ படப்பிடிப்பின் போது இயக்குர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியை, நடிகை வரலட்சுமி சரத்குமார் நக்கலடித்து பேசியுள்ளார்.

TNN 4 Dec 2017, 9:01 pm
‘சத்யா’ படப்பிடிப்பின் போது இயக்குர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியை, நடிகை வரலட்சுமி சரத்குமார் நக்கலடித்து பேசியுள்ளார்.
Samayam Tamil varalakshmi sarathkumar troll director pradeep krishnamoorthy
படப்பிடிப்பின் போது இயக்குனரை நக்கலடித்த வரலட்சுமி சரத்குமார்!


விஜய் ஆண்டனியை வைத்து ‘சைத்தான்’ படத்தை இயக்கியவர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. தற்போது இவர் இயக்கி வரும் படம் ‘சத்யா’. இந்தப் படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில், முக்கிய வேடத்தில் வரலட்சுமி சரத்குமார், சதீஷ், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர்.

பொதுவாக, ஒவ்வொரு காட்சியிலும் எப்படி நடிக்க வேண்டும் என இயக்குநர்கள் நடிகர்களுக்கு சொல்லிக் கொடுப்பது வழக்கம். அப்படித்தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியும் எல்லோருக்கும் சீனை பற்றி சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஆனால், வரலட்சுமிக்கு சொல்லிக் கொடுத்தபோது, ‘போயா...’ என நக்கலாகக் கூறியுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்