ஆப்நகரம்

அப்பா படத்தில் நடிக்க முடியாது! நடையை கட்டிய வரலட்சுமி

ஆணாதிக்கம் பிடித்த தயாரிப்பாளருடன் பணியாற்ற முடியாது என்று நடிகை வரலட்சுமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

TNN 28 Mar 2017, 9:11 pm
ஆணாதிக்கம் பிடித்த தயாரிப்பாளருடன் பணியாற்ற முடியாது என்று நடிகை வரலட்சுமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Samayam Tamil varalakshmi walks from samuthikani appa remake in malayalam
அப்பா படத்தில் நடிக்க முடியாது! நடையை கட்டிய வரலட்சுமி


சமுத்திரக்கனி இயக்கி, தயாரித்து, நடித்த படம் அப்பா. இப்படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து தற்போது, மலையாளத்திலும் இப்படத்தை சமுத்திரக்கனி ரீமேக் செய்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. மலையாளத்தில் ரீமேக் செய்யப்படும் இப்படத்திற்கு ஆகாச மிட்டாய் என்று தலைப்பு வைத்துள்ளனர் படக்குழுவினர்.

தமிழில் சமுத்திரக்கனி நடித்த கதாபாத்திரத்தில் மலையாளத்தில் ஜெயராம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வரலட்சுமி ஒப்பந்தமாகியிருந்தார். இந்நிலையில், படத்திலிருந்து விலகிவிட்டதாக திடீரென்று அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஆணாதிக்கம் நற்பண்பு இல்லாத தயாரிப்பாளருடன் பணியாற்றுவதற்கு என்னால் முடியாது என்றார். மேலும், படத்திலிருந்து விலக அனுமதி வழங்கிய சமுத்திரக்கனி மற்றும் ஜெயராமுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார். படத்தை இயக்குபவர் சமுத்திரக்கனி தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஆணாதிக்கம் மிக்கவர் என்று சமுத்திரக்கனியை சொல்கிறாரா? இல்லை படத்தில் ஹீரோவாக நடிக்கும் ஜெயராமை சொல்கிறாரா என்பது புரியாத புதிராக இருக்கிறது

அடுத்த செய்தி

டிரெண்டிங்