ஆப்நகரம்

கருத்தவன்லாம் கலீஜாம்! கிளப்பிவிட்டாங்க! தக்காளி! இது ’வேலைக்காரன்’ சிங்கிள் டிராக்...!

வேலைக்காரன் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றின் சிங்கிள் டிராக் வெளியாகியுள்ளது.

TNN 29 Aug 2017, 1:21 pm
சென்னை: வேலைக்காரன் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றின் சிங்கிள் டிராக் வெளியாகியுள்ளது.
Samayam Tamil velaikkaran single track released
கருத்தவன்லாம் கலீஜாம்! கிளப்பிவிட்டாங்க! தக்காளி! இது ’வேலைக்காரன்’ சிங்கிள் டிராக்...!


மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேலைக்காரன்’. முக்கிய வேடத்தில் மலையாளத்தின் பிரபல நடிகர் பஹத் பாசில் நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதை 24AM Studios நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் சிங்கிள் டிராக் தற்போது வெளியாகியுள்ளது.

இப்பாடல் கருத்தவன்லாம் கலீஜாம்! கிளப்பிவிட்டாங்க! தக்காளி! என்று தொடங்குகிறது. உழைப்பாளர்களின் பெருமை பேசும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இப்பாடல், கவிஞர் விவேகாவால் எழுதப்பட்டது.

https://t.co/UdaHUX9GEO here s d #VERILOCAL song frm our Rockstar @anirudhofficial 🌟lyrics by @vivekalyrics sir 👍😊#VelaikkaranFirstSingle — Sivakarthikeyan (@Siva_Kartikeyan) August 28, 2017 இந்நிலையில் வேலைக்காரன் திரைப்படம் வரும் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaikkaran single track released.

அடுத்த செய்தி

டிரெண்டிங்