ஆப்நகரம்

ஒரு நாளுக்கு இத்தனை கிலோ மீட்டர் நடக்கிறாரா வெங்கட் பிரபு? லாக் டவுனில் பிட்னெஸ்

இயக்குனர் வெங்கட் பிரபு லாக்டவுனில் தினமும் நடைப்பயிற்சி செய்து வருகிறார்.

Samayam Tamil 6 Jul 2020, 6:58 pm
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. சென்னை 28, மங்காத்தா என அவரது படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கின்றன.
Samayam Tamil Venkat Prabhu


தற்போது மாநாடு என்ற படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் வெங்கட் பிரபு. சிம்பு ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் மிக நீண்ட தாமதத்திற்கு பிறகு இந்த வருடம் தான் துவங்கியது. சென்னையில் பூஜையுடன் துவங்கியது படத்தின் ஷூட்டிங் சில நாட்கள் நடந்தது. அதன் பிறகு ஐதராபாத்தில் உள்ள ஒரு பிரபல ஸ்டுடியோவில் செட் போட்டு படக்குழுவினர் ஷூட்டிங் நடத்தினர். அதில் சிம்பு, எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆனால் அந்த சமயத்தில் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதிக அளவில் பரவியதால் படப்பிடிப்பை ரத்து செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் ஷூட்டிங்கை கேன்சல் செய்து விட்டு சென்னை திரும்பியது படக்குழு.

அதன் பிறகு ஷூட்டிங் நடத்த அனுமதி கிடைக்கவில்லை என்பதால் மொத்த படக்குழுவும் தங்கள் வீட்டிலேயே தான் இருக்கின்றனர். சிம்பு தன்னுடைய வீட்டில் சமையல் செய்யும் வீடியோவை சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்தார். அதுவும் வைரலாகி இருந்தது. மேலும் வீட்டிலேயே அவர் ஒர்க் அவுட் செய்து வருகிறார் என்று காட்ட வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்றும் வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபுவும் இந்த ஒரு முழு அடைப்பு நேரத்தை வீணாக்காமல் தன்னுடைய உடலை ஃபிட்டாக மாற்ற ஒர்க்கவுட் செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம்.

கடந்த இரு மாதமாக வெங்கட்பிரபு தவறாமல் வாக்கிங் செய்து வருகிறாராம். பிரபல எடிட்டர் பிரவீன் கே.எல் தான் இதற்கு ஊக்கமளித்தார் என்று வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தினமும் சராசரியாக 15 கிலோ மீட்டர் அளவுக்கு வெங்கட் பிரபு நடக்கிறார். இப்படி ஃபிட்னஸ் மீது அதிக கவனம் செலுத்தி வருவது பற்றி வெங்கட் பிரபு குறிப்பிட்டிருப்பதாவது..

"2 மாதம் ஆகிவிட்டது.. நான் தினம் தோறும் நடைபயிற்சி செல்ல துவங்கி விட்டேன். எடிட்டர் பிரவீன் KLக்கு நன்றி. தற்போது என்னுடைய வார சராசரியாக நடக்கும் தூரம் ஒரு நாளைக்கு 15 கிலோ மீட்டராக இருக்கிறது. துவங்குவதற்கு இப்போதும் தாமதமாகி விடவில்லை. நம் நண்பர்களுக்கு ஊக்கம் அளிப்போம். ஆரோக்கியமாக இருப்போம். பாதுகாப்பாக இருப்போம். இதையும் தெரிந்து கொள்ளுங்கள்.. நான் முழுவதும் வீட்டுக்குள்ளேயே தான் நடந்தேன்" என அவர் தெரிவித்துள்ளார்.


இதற்கு பதில் அளித்துள்ளார் எடிட்டர் பிரவீன் "நீங்கள் எங்களுக்கு எவ்வளவோ கொடுத்திருக்கிறீர்கள். இது ஒன்றுமே இல்லை. இது உங்களது கடின உழைப்பு" என குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்