ஆப்நகரம்

வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’யில் கலந்துகொண்ட 3 ஹீரோயின்கள்!

இயக்குனர் வெங்கட் பிரபு நடத்தும் ‘பார்ட்டி’ படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிக்கவுள்ளனர்.

TNN 27 Jun 2017, 7:26 pm
இயக்குனர் வெங்கட் பிரபு நடத்தும் ‘பார்ட்டி’ படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிக்கவுள்ளனர்.
Samayam Tamil venkat prabhus party to be shot in fiji islands
வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’யில் கலந்துகொண்ட 3 ஹீரோயின்கள்!


‘சென்னை 28’ இரண்டாம் பாகத்திற்கு பிறகு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் புதிய படம் ‘பார்ட்டி’. இந்தப் படத்தை அம்மா கிரியேஷன் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார். வழக்கமாக வெங்கட்பிரபுவின் படங்களுக்கு யுவன்ஷங்கர் ராஜாதான் இசையமைப்பார். இந்தப் படத்திற்கு வெங்கட்பிரபுவின் தம்பி பிரேம்ஜி அமரன் இசையமைக்கிறார்.



படத்தில் சத்யராஜ், நாசர், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், ஜெய், சிவா, சம்பத், கயல் சந்திரன் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளன. .இவர்கள் தவிர ரெஜினா கசன்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு முழுவதும் பிஜி தீவில் நடக்கிறது. படக்குழுவினர் அடுத்த மாதம் பிஜி தீவு புறப்பட்டுச் செல்கிறார்கள். ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்து விட்டு சென்னை திரும்புகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்