ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம் நேரடியாக OTTயில் ரிலீஸ் என தகவல் வெளியானதில் இருந்து தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஒவ்வொரு படமும் தியேட்டரில் வெளியாகி 100 நாட்களுக்கு பிறகு தான் ஆன்லைனில் ரிலீஸ் ஆகவேண்டும் என அவர்கள் கூறுகின்றனர். அதை மீறி OTTயில் ரிலீஸ் ஆனால் இனி சூர்யா தரப்பு படங்களை திரையிட மாட்டோம் என அறிவித்துள்ளனர்.
சூர்யாவுக்கு ஆதரவாக சில முன்னணி தயாரிப்பாளர்களும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். மேலும் சந்தனத்தின் சர்வர் சுந்தரம் மற்றும் ஜோதிகாவின் பரமபதம் விளையாட்டு உள்ளிட்ட பல படங்கள் நேரடியாக OTT யில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது கூறப்படுகிறது.
இதனால் தொடர்ந்து தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் இடையே தொடர்ந்து பிரச்சனை நடந்து வருகிறது.
இத்தனை சர்ச்சைகளுக்கு நடுவில் வெங்கட் பிரபு தயாரித்துள்ள ஆர்கே நகர் என்ற படம் நேரடியாக நெட்பிலிக்ஸில் நேற்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த தகவலை அவரே ட்விட்டரில் கூறியுள்ளார். "இன்று முதல் ஆர்.கே.நகர் படத்தை நேர்மையாக நெட்பிலிக்ஸில் பாருங்கள்" என வெங்கட் பிரபு குறிப்பிட்டுள்ளார்.
இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகாத நிலையில் சென்ற வருடமே நெட்பிலிக்ஸில் வெளியானது, ஆனால் உடனே அதில் இருந்து நீக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தான் தற்போது மீண்டும் இந்த படத்தை OTTயில் ரிலீஸ் செய்துள்ளனர்.
வைபவ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் சனா அல்தாப், அஞ்சனா கீர்த்தி, சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சரவண ராஜன் இயக்கியுள்ள ஆர்கே நகர் படத்திற்கு நடிகர் பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.