ஆப்நகரம்

நடிகர் வினுசக்கரவர்த்தி உடல்நலக்குறைவால் மரணம்!

சென்னை: பழம்பெரும் நடிகர் வினுசக்கரவர்த்தி உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்.

TNN 27 Apr 2017, 9:27 pm
சென்னை: பழம்பெரும் நடிகர் வினுசக்கரவர்த்தி உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்.
Samayam Tamil veteran actor vinu chakravarthy passed away
நடிகர் வினுசக்கரவர்த்தி உடல்நலக்குறைவால் மரணம்!


அவருக்கு வயது 71. கடந்த 1945ம் ஆண்டு பிறந்த அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில், 1000க்கும் அதிகமான சினிமா படங்களில் நடித்துள்ளார்.

இவர், கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதம் 21ம் தேதி மயங்கிவிழுந்த நிலையில், சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளதால், தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும்படி அறிவுறுத்தினர்.

இதன்படி, 2 ஆண்டுகளுக்கும் மேலாக, சிகிச்சை பெற்றுவந்த அவரை, தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகர் சரத்குமார் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் நேரில் சந்தித்து, நலம் விசாரித்து வந்தனர். இந்நிலையில், இன்று எதிர்பாராவிதமாக, சிகிச்சை பலனின்றி, வினுசக்கரவர்த்தி உயிர் பிரிந்தது.



உசிலம்பட்டியில் கடந்த 1945ம் ஆண்டு பிறந்த வினுசக்கரவர்த்தி, பொருளாதார பட்டப்படிப்பு பயின்றுள்ளார். இதன்பின், தமிழக காவல்துறை மற்றும் ரயில்வேத் துறையில் சில மாதங்கள் பணிபுரிந்த அவர், 1977ம் ஆண்டு முதலாக, தமிழ், கன்னட சினிமாக்களில் உதவி இயக்குனராக, கதை எழுதுபவராக பணிபுரிய தொடங்கினார்.

இதன்போது ஏற்பட்ட பழக்கம் காரணமாக, வினுசக்கரவர்த்தியை தயாரிப்பாளர் திருப்பூர் மணி, நடிகனாக அறிமுகம் செய்தார். இதன்பின், பல்வேறு படங்களில், குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும், நடித்து ரசிகர்களை ஈர்த்தார் வினுசக்கரவர்த்தி.

இவரே, வண்டிசக்கரம் என்ற படம் மூலமாக, தமிழ் திரையுலகில் சில்க் ஸ்மிதாவை அறிமுகம் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Kollywood: Veteran Cinema actor Vinu Chakravarthy (71) passed away.

அடுத்த செய்தி

டிரெண்டிங்