ஆப்நகரம்

தெலுங்கு பட இயக்குனர் தாசரி நாராயண ராவ் காலமானார்

தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் தாசரி நாராயண ராவ் இன்று காலமானார்.

TNN 30 May 2017, 8:20 pm
தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் தாசரி நாராயண ராவ் இன்று காலமானார்.
Samayam Tamil veteran telugu filmmaker dasari narayana rao dies at 74
தெலுங்கு பட இயக்குனர் தாசரி நாராயண ராவ் காலமானார்


தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர்களில் தாசரி நாராயண ராவும் (75) ஒருவர். தேசிய விருது பெற்ற இயக்குனரான தசரி இதுவரை 150 படங்களை இயக்கியும், 50க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தும் உள்ளார். தாதா மானவடு என்ற தெலுங்கு படத்தை முதன் முதலில் இயக்கியுள்ளார். இவரது படங்களில் 12 படங்கள் வெள்ளி விழா கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 250 படங்களுக்கு மேல் வசனங்கள் எழுதியுள்ளார். மேலும், பல ஹிட் பாடல்களையும் கொடுத்துள்ளார்.

சமீபத்தில், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு இயக்குனரைத் தொடர்ந்து பாராளுமன்றத்தின் உறுப்பினராகவும், ஆந்திர மாநிலத்திற்கான நிலக்கரி துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில், இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் மூச்சுத்திணறல் ஏற்பட ஹைதராபாத்தில் உள்ள கே.ஐ.எம்.எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு அவருக்கு சிறுநீரகம் மற்றும் நுரையீரல் ஆகியவற்றில் நோய் தொற்றுக்கான பாதிப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். சிறிது காலம் வீட்டில் ஓய்வில் இருந்த தசரி கடந்த 4ம் தேதி 75வது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாடினார்.



இந்நிலையில், மீண்டும் அவரது உடல்நிலை பாதிக்கப்பட கே.ஐ.எம்.எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 3 நாட்கள் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடலின் பல பாகங்கள் பாதிப்படைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இரவு 7 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Legandry director Dasari Narayana Rao passed away at KIMS Hospital in the city on Tuesday. He was 75.

அடுத்த செய்தி

டிரெண்டிங்