ஆப்நகரம்

அசுரனை பார்த்தால் எனக்கு சந்தோஷமாகவே இல்லை: வெற்றிமாறன்

அசுரன் படம் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Samayam Tamil 21 Oct 2019, 10:22 am
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்த அசுரன் படம் கடந்த 4ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
Samayam Tamil vetrimaaran


படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. படத்தை பார்த்தவர்கள் இது வட சென்னையை விட நன்றாக இருப்பதாக பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில் மும்பை திரைப்பட விழாவில் பேசிய வெற்றிமாறன் அசுரன் குறித்து கூறியதாவது,

நான் அசுரன் படத்தை முடித்த விதம் எனக்கு திருப்திகரமாக இல்லை. மக்களுக்கு படம் பிடித்துள்ளது. நல்ல வசூலும் செய்து கொண்டிருக்கிறது அசுரன். அதில் மகிழ்ச்சி தான் என்றாலும் படத்தை முடித்த விதம் எனக்கு சந்தோஷத்தை கொடுக்கவில்லை. 22 நாட்கள் படப்பிடிப்பு பாக்கி இருந்தபோது படத்தை 40 நாட்களில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று என்னிடம் கூறினார்கள் என்றார்.

தனது கெரியரிலேயே மிகவும் வேகமாக எடுத்து முடிக்கப்பட்ட படம் அசுரன் என்று வெற்றிமாறன் பலமுறை தெரிவித்துள்ளார்.

மீண்டும் மாநாட்டில் சிம்பு: அப்போ 'மகா மாநாடு'?

அனைத்து துறைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பார்த்துப் பார்த்து படம் இயக்குபவர் வெற்றிமாறன். ஆனால் அசுரன் படத்தை விரைந்து முடிக்க அவரை அவசரப்படுத்தியதால் அவரால் அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்த முடியவில்லை.

பேட்டிக்கு பேட்டி படத்தை வேகமாக முடித்துக் கொடுக்க வைத்ததாக வெற்றிமாறன் கூறுவதை பார்த்து அப்படி என்ன அவசரம், யார் அவரை சரியாக வேலை செய்ய விடாமல் தடுத்தது என்று பேச்சு கிளம்பியுள்ளது.

அவசரம், அவசரமாக எடுத்துள்ளபோதிலேயே படம் இவ்வளவு நன்றாக வந்துள்ளது என்றால், வெற்றிமாறனை நிம்மதியாக வேலை செய்யவிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்குமே.

அடுத்த செய்தி

டிரெண்டிங்