ஆப்நகரம்

கதை ரெடி.. ஆனால் இது நடந்தால் மட்டுமே வேட்டையாடு விளையாடு 2 உருவாகும்?

வேட்டையாடு விளையாடு 2 படத்தின் கதையை கெளதம் மேனன் முடித்து தயாராக வைத்திருக்கிறார்.

Samayam Tamil 17 Jun 2020, 1:57 pm
2006ல் கமல்ஹாசன் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த படம் வேட்டையாடு விளையாடு. அதில் கமலுடன் கமாலினி முகர்ஜி, ஜோதிகா, டேனியல் பாலாஜி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
Samayam Tamil Kamal Haasan in Vettaiyaadu Vilaiyaadu


மிகப்பெரிய ஹிட் ஆன அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என்று தான் ரசிகர்கள் கௌதம் மேனனிடம் கடந்த பல வருடங்களாக கேட்டு வருகின்றனர். இது பற்றி சில மாதங்களுக்கு முன்பு கௌதம் மேனன் அளித்த பேட்டி ஒன்றில் வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என சூசகமாக தெரிவித்து இருந்தார். அதனால் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாட ஆரம்பித்தனர்.

கமல்ஹாசனிடம் வேட்டையாடு விளையாடு 2 கதையை மீண்டும் கூற வேண்டும் என்று அப்போது கௌதம் மேனன் தெரிவித்திருந்தார். அதனால் வேட்டையாடு விளையாடு 2 படம் கொரோனா பிரச்சனை முடிவுக்கு வந்தபிறகு துவங்க வாய்ப்பிருக்கிறது என சமீப காலமாக கோலிவுட் வட்டாரத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் கௌதம்மேனன் வேட்டையாடு விளையாடு 2 படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதி முடித்து விட்டார் என்றும் தற்போது வரை 120 பக்கங்கள் அவர் முடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் கடைசி 30 நிமிட காட்சிகள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அதில் தற்போது கவனம் செலுத்தி வருகிறாராம்.

கமலிடம் கதையை கூறும்போது அது அவரை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே பல விஷயங்களை செய்து வருகிறாராம் அவர்.

இரண்டாம் பாகத்தின் கதையை கௌதம் மேனன் கமலிடம் கூறிய பிறகு அது அவருக்கு பிடித்திருந்தால் மேலும் படம் எப்போது துவங்கும் என்பது பற்றிய பேச்சுவார்த்தை நடக்கும் என்று தெரிகிறது.

'இந்த படம் நடக்குமா நடக்காதா என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் என்னுடைய சிறப்பான பணியை இதில் செய்துள்ளேன்' என்று அவர் கூறியதாகவும் சில தகவல்கள் உள்ளன. அதனால் வேட்டையாடு விளையாடு 2ம் பாக கதை கமலுக்கு பிடித்திருந்தால் மட்டுமே இந்த படம் உருவாக வாய்ப்புள்ளது, இல்லை என்றால் கைவிடப் படலாம் என்றும் கூறப்படுகிறது.

வேட்டையாடு விளையாடு முதல் பாகத்தில் கமலின் அறிமுக காட்சி ரசிகர்களை கவரும் வகையில் மிக சிறப்பாக வடிவமைக்கப் பட்டிருக்கும். அதுபோலவே இரண்டாம் பாகத்திலும் அறிமுக காட்சி இருக்கிறது, அதை படமாக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கௌதம் மேனன் பேட்டியில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல் தற்போது இந்தியன் 2 மற்றும் தலைவன் இருக்கின்றான் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படம் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இதன் ஷூட்டிங் கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் ஒரு ஸ்டூடியோவில் நடந்து கொண்டிருந்த போது கிரேன் சரிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். அதற்கு பிறகு ஷூட்டிங் மீண்டும் துவங்காமல் இருக்கிறது. கொரோனா லாக்டவுன் முடிந்தபிறகு அரசு ஷூட்டிங் நடத்த அனுமதி அளித்தால் வேறொரு ஸ்டூடியோவில் இந்தியன் 2 ஷூட்டிங் துவங்கும் என்றும் தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்