ஆப்நகரம்

suriya டபுள் ட்ரீட் தரும் சூரரைப் போற்று டீம் !

சூரரைப் போற்று படத்தில் இடம்பெற்றுள்ள வெய்யோன் சில்லி பாடல் இன்று வெளியாகிறது. அத்துடன் இன்னொரு ரிலீசுக்கும் சூர்யா ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Samayam Tamil 13 Feb 2020, 11:11 am
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா, நடிப்பில் வெளியாகவிருக்கும் சூரரைப் போற்று படத்தின் சிங்கிள் ஒன்று இன்று ரிலீஸ் ஆவதாக அறிவிப்பு வெளியானது. வெய்யோன் சில்லி என்று ஆரம்பிக்கும் அந்த பாடல் ரொமாண்டிக் பாடலாக இருக்கும் என்று முன்னதாக இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ்குமார் தெரிவித்திருந்தார்.
Samayam Tamil suriya



இந்நிலையில் தற்போது, வெய்யோன் சில்லி பாடலின் 1 நிமிட வீடியோ காட்சி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அந்த பாடலின் புரோமோ சாங்காக இருக்கும் எனத் தெரிகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு

விமானத்தில் 100 ஏழைக்குழந்தைகளோடு இந்த பாடலை படக்குழு வெளியிட இருப்பதாக அறிவித்து அதற்கான வேலைகளை ஏற்பாடு செய்துவருகின்றது. தமிழ் பாடலுடன் சேர்த்து தெலுங்கு பாடலும் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் வெய்யோன் சில்லி என தொடங்கும் இதே பாடல் தெலுங்கில் பில்லா புலி என ஆரம்பிக்கிறது.


ஆடியோ வடிவில் முழு பாடலையும், ஒரு நிமிட புரோமோ வீடியோவையும் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். முன்னதாக 100 ஏழைக் குழந்தைகளை விமானத்தில் அழைத்துச் சென்று சுற்றிக் காட்டவிருப்பதாக படக்குழுவிடமிருந்து அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பை மிகவும் வித்தியாசமாக அறிவித்திருந்தார்கள். இதன் மூலம் 100 குழந்தைகளின் விமானத்தில் பறக்கும் கனவு இன்று நிஜமாகப் போகிறது.


சூரரைப் போற்று படம் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் மாஸ்டர் படமும் வெளியாகவிருப்பதாக செய்திகள் வருகின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்