ஆப்நகரம்

தனது கார் ஓட்டுநர் மகளின் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் - வைரல் வீடியோ!

நடிகர் விஜய், தனது கார் ஓட்டுநரின் மகள் திருமண விழாவில் பங்கேற்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Samayam Tamil 4 Mar 2019, 4:25 pm
இயக்குநர் அட்லி இயக்கும் ”தளபதி 63” படத்தில் நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எனவே ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Samayam Tamil Vijay63


இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை குறித்து, பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. ”தளபதி 63” படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படமோ அல்லது வீடியோவோ கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.

அவ்வாறு கிடைத்தால் அதனை வைரலாக்கி, கொண்டாடி தீர்த்து விடுவர். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, தனது கார் ஓட்டுநர் ராஜேந்திரனின் மகள் நிச்சயதார்த்த விழாவிற்கு நடிகர் விஜய் சென்றுள்ளார்.

அப்போது ரசிகர்கள் எடுத்த வீடியோ தான், தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது. அதில், ஒரு வெள்ளை நிற சட்டை உடன் எளிமையாக காட்சி தருகிறார். அவருடன் மனைவி சங்கீதா மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரும் வருகை புரிந்தனர். மேலும் அட்லி, அவரது மனைவி பிரியாவும் வந்திருந்தனர்.

நகை விளம்பரம் ஒன்றில் தனது ஓட்டுநர் மகளின் திருமணத்திற்கு செல்வதாக நடிகர் விஜய் நடித்திருந்தார். இந்நிலையில் நிஜ வாழ்க்கையிலும், அது உண்மையானது அவரது ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்