ஆப்நகரம்

பாலகிருஷ்ணாவுக்கு மனைவியான வித்யாபாலன்!

என்.டி.ஆர். வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு மனைவியாக நடிகை வித்யாபாலன் நடிக்கவுள்ளார்.

Samayam Tamil 26 Mar 2018, 4:58 pm
என்.டி.ஆர். வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு மனைவியாக நடிகை வித்யாபாலன் நடிக்கவுள்ளார்.
Samayam Tamil balakrishna


பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை வித்யா பாலன். இந்தி சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவர் நடித்த படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. சமீபத்தில் அவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன.

இந்நிலையில் இயக்குனர் தேஜா இயக்கவுள்ள தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் வித்யாபாலன். இவர் நடிக்கவுள்ள படம் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகராகவும், ஆந்திர முதல்வராகவும் இருந்த என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்ட படமாகும்.

வித்யாபாலன்



இந்தப் படத்தில் என்.டி.ஆராக அவரின் மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். அதேபோல என்.டி.ஆரின் மனைவி பசவதாராம் ஆக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் வரும் மார்ச் 29 முதல் ஆரம்பிக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்