ஆப்நகரம்

சூர்யாவுடன் மீண்டும் இணைந்த விக்னேஷ் சிவன்!

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை அடுத்து நடிகர் சூர்யாவுடன், இயக்குனர் விக்னேஷ் சிவன் ‘என்.ஜி.கே.’ படம் மூலம் இணைந்துள்ளார்.

Samayam Tamil 22 Oct 2018, 12:26 pm
செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் படம் ‘என்.ஜி.கே.’. இந்தப் படம் சமீபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனும் இணைந்துள்ளார். ‘என்.ஜி.கே’ படத்தில் இடம்பெறும் முக்கிய பாடல் ஒன்றை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
Samayam Tamil surya


இந்த பாடல் குறித்து விக்னேஷ் சிவன் தனது டுவிட்டரில் கூறியபோது, ‘‘இயக்குனர் செல்வராகவனுடன் பணிபுரியவேண்டும் என்ற நீண்ட நாள் கனவு தற்போது நனவாகிவிட்டதாகவும், யுவன் இசையில் பாட்டெழுதவும், சூர்யாவுடன் மீண்டும் இணைந்ததிலும் எனக்குப் பெருமை‘‘ என்று கூறியுள்ளார்.

இந்தப் படத்தில் சூர்யா, ரகுல்ப்ரித்திசிங், சாய்பல்லவி உள்பட பலர் நடித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்