ஆப்நகரம்

என் தங்கமே.. திருமணத்துக்கு முன்பாக நயன்தாராவுக்கு சேதி சொன்ன விக்கி..!

நயன்தாராவை கரம் பிடிப்பது குறித்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 9 Jun 2022, 10:31 am
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் நயன்தாரா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'நானும் ரவுடிதான்' படத்தில் நடித்த போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. இன்று இவர்களது திருமணம் நிகழ்சி கோலாகலமாக துவங்கியுள்ளது. இந்நிலையில் நயன்தாராவுக்காக, விக்னேஷ் சிவன் அதிகாலையில் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil Nayanthara - Vignesh Shivan
Nayanthara - Vignesh Shivan


கோலிவுட் வட்டாரத்தில் நட்சத்திர காதல் ஜோடிகளாக நயன் – விக்கி இருவரும் வலம் வந்தனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் கோடம்பாக்கத்தினரும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரின் திருமணத்தையும் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணம் இன்று மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக துவங்கியுள்ளது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

நயன் – விக்கி திருமணம் முதலில் திருப்பதியில் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அங்குஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருந்ததால், மகாபலிபுரத்தில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலான ஷெரட்டன் பார்க்கில் இன்று காலையிலே நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றுள்ளது.திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த திருமண நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவை திருமணம் செய்து கொள்வது குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ‘கடவுளுக்கு நன்றி. என் வாழ்க்கை அழகான மனிதர்களால் கடந்து வந்தது, அதற்கும் நன்றி. நல்ல உள்ளங்கள், நல்ல தருணங்கள், நல்ல நிகழ்வுகள், நல்ல உள்ளங்களின் ஆசிர்வாதங்கள் என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்தது.

கைதில செத்தவரு விக்ரம்ல எப்படிப்பா வந்தாரு: லோகேஷ் சொன்ன வேற லேவல் தகவல்.!ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பில் நடந்த அழகான விஷயங்கள் வாழ்க்கையை அழகாக்கியது. அனைத்து பிரார்த்தனைகளுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். இப்போது என் வாழ்வு நயன்தாராவுக்காக அர்ப்பணிக்கப்படுகிறது. என் தங்கமே! இன்னும் சில மணி நேரங்களில் நாம் இருவரும் ஒன்றாகவே மாற போவதை நினைத்து உற்சாகமாக இருக்கிறேன்’ என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

View this post on Instagram A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

அடுத்த செய்தி

டிரெண்டிங்