ஆப்நகரம்

விஜய் 61 படகாட்சிகள் லீக்... அதிர்ச்சியில் படக்குழு!!

விஜய் 61 படத்தில் பட காட்சிகள் அடுத்தடுத்து வெளியாகி வருவதைக் கண்டு படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.

TOI Contributor 27 May 2017, 5:35 pm
விஜய் 61 படத்தில் பட காட்சிகள் அடுத்தடுத்து வெளியாகி வருவதைக் கண்டு படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.
Samayam Tamil vijay 61 film scenes leaked
விஜய் 61 படகாட்சிகள் லீக்... அதிர்ச்சியில் படக்குழு!!


விஜய் -அட்லி கூட்டணியில் உருவாகிவரும் ‘விஜய் 61’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் படத்தில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், வடிவேலு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி படக்குழுவினருக்கு பீதியை கிளப்பியிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, விஜய்-காஜல் அகர்வால் ஆடிப் பாடும் பாடல் படமாகும் காட்சி வீடியோவாக வெளிவந்தது. அதைத் தொடர்ந்து நேற்று விஜய் சம்பந்தப்பட்ட காட்சி இடம்பெறும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் விஜய் வேஷ்டி அணிந்து ரொம்பவும் பவ்யமாக நின்றுகொண்டிருப்பது போல் உள்ளது. இப்படியாக அடுத்தடுத்து படக்காட்சிகள் வெளியாவது படக்குழுவினரை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Vijay 61 film scenes leaked!!

அடுத்த செய்தி

டிரெண்டிங்