ஆப்நகரம்

21ல் வெளியாகிறது விஜய் 62 படத்தின் தலைப்பு, பா்ஸ்ட் லுக்

நடிகா் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 62 படத்தின் தலைப்பு, பா்ஸ்ட் லுக் போஸ்டா் வருகிற 21ம் தேதி வெளியிடுப்படும் என்று சன்பிக்சா்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 18 Jun 2018, 7:15 pm
நடிகா் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 62 படத்தின் தலைப்பு, பா்ஸ்ட் லுக் போஸ்டா் வருகிற 21ம் தேதி வெளியிடுப்படும் என்று சன்பிக்சா்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
Samayam Tamil Vijay 123.


ஏ.ஆா்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 62 படத்தின் டைட்டில் தற்போது வரை வெளியிடப்படவில்லை. இதனால் விஜய் ரசிகா்கள் மிகுந்த எதிா்பாா்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனா். மேலும் இந்த கதை ஏற்கனவே முருகதாஸ், ரஜினியிடம் சொல்லி பாராட்டு வாங்கிய கதை. படத்தில் அரசியல்வாதிகளாக ராதாரவி, பழ.கருப்பையா நடித்துள்ளனா்.

தற்போது வரை விஜய் 62 என்று உச்சரித்து வந்தவா்களுக்கு படக்குழு இன்ப அதிா்ச்சி ஒன்றை வழங்கி உள்ளது. நடிகா் விஜய்யின் பிறந்த நாள் விழா 22ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு முந்தைய தினம், ஜூன் 21ம் தேதி (வியாழன் கிழமை) மாலை 6 மணிக்கு படத்தின் பா்ஸ்ட்லுக் மற்றும் படத்தின் தலைப்பு வெளியாக உள்ளதாக சன் பிக்சா்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனால் விஜய் ரசிகா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்