ஆப்நகரம்

இந்த மூவரில் யாருக்கு வாய்ப்பு தருவார் நடிகர் விஜய்!

நடிகர் விஜய், தளபதி 62 படத்துக்கு பிறகு இந்த மூன்று முன்னணி இயக்குனர்களில் ஒருவர் படத்தில் கண்டிப்பாக நடிக்கவுள்ளார்.

Samayam Tamil 24 May 2018, 4:35 pm
நடிகர் விஜய், தளபதி 62 படத்துக்கு பிறகு இந்த மூன்று முன்னணி இயக்குனர்களில் ஒருவர் படத்தில் கண்டிப்பாக நடிக்கவுள்ளார்.
Samayam Tamil Vijay_0.


நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், தன்னுடைய 62வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். தற்போது இந்தப் படம் இறுதி கட்டத்தை நெருடங்கி விட்டது. இப்படம் தமிழகத்தில் நிலவி வரும் முக்கிய பிரச்சன்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்தப் படத்துக்கு பிரம்மாண்டமாக அரசியல் மாநாடு போன்று செட் போட்டு படப்பிடிப்பை நடத்தினர் படக்குழுவினர்.

இந்நிலையில் இந்த படத்துக்கு பிறகு விஜய்யின் அடுத்த படத்தை யார் இயக்குகிறார் என்று கேள்வி எழும்பியுள்ளது, ஏற்கனவே இயக்குனர்கள் அட்லீ, மோகன் ராஜா மற்றும் அமீர் போன்றவர்கள் விஜய்யிடம் கதைசொல்லியுள்ளனர். இதில் அமீர் சொன்ன கதை விஜய்க்கு மிகவும் பிடித்தாக கூறப்படுகிறது. ஆனால் தற்போதைக்கு எந்த இயக்குனருடன் இணைவார் என்று சொல்லமுடியாது, முருகதாஸ் படம் முடிந்த பிறகு தான் விஜய் அடுத்த படத்தின் இயக்குனரை முடிவு செய்வர் என்கிறது விஜய் தரப்பு.

அடுத்த செய்தி

டிரெண்டிங்