ஆப்நகரம்

விஜய்க்கு ஜோடியாகும் உலக அழகி ஐஸ்வர்யா ராய்!

மணிரத்னம் இயக்கும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 7 Jan 2019, 1:40 pm
நடிகர் விஜய், ‘சர்கார்’ படத்தை அடுத்து தற்போது அட்லி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளது. அடுத்ததாக விஜய்யை வைத்து இயக்க பல இயக்குனர்களும் போட்டி போட்டு வருகின்றனர். அதில் முதன்மையாக இருப்பவர் இயக்குனர் மணிரத்னம். இவர் பிரபல எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை படமாக்க உள்ளார்.
Samayam Tamil vijay-aishwary


இந்நிலையில் இப்படத்தில் அமிதாப்பச்சன், விக்ரம், சிம்பு, ஜெயம் ரவி, விஜய் சேதுபதி போன்றவர்களும் நடிக்கின்றனர். இவர்களுடன் நடிகர் விஜய்யும் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாகத்தான் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்யை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்