ஆப்நகரம்

விஜய், அஜித் படங்களை எடுத்த பிரபல தயாரிப்பாளர் திடீர் மரணம்!

பிரபல தயாரிப்பாளர் ஒருவர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

Samayam Tamil 12 May 2019, 5:45 pm
விஜய வாகினி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனர் பி.நாகிரெட்டி. இவரது இளைய மகன் வெங்கட்ராம ரெட்டி. வயது 75. இவர் உடல்நலக்குறைவால் இன்று மதியம் 1 மணிக்கு காலமானார். இவருக்கு பாரதி ரெட்டி என்ற மனைவி உள்ளார்.
Samayam Tamil Venkatarama reddy


இந்த தம்பதிக்கு ராஜேஷ் ரெட்டி என்ற மகனும், ஆராதனா, அர்ச்சனா ஆகிய மகள்களும் இருக்கின்றனர். மறைந்த வெங்கட்ராம ரெட்டியின் உடல் சென்னையில் நாளை தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் அஜித் நடித்த வீரம், விஜய் நடித்த பைரவா, விஷால் நடித்த தாமிரபரணி, தனுஷ் நடித்த படிக்காதவன், வேங்கை ஆகிய படங்களை தயரித்தவர். தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ படத்தை தயாரித்து வந்தார்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சூழலில், திடீரென மரணமடைந்துள்ளார். வெங்கட்ராம ரெட்டியின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்