ஆப்நகரம்

அஜீத், விஜய்க்கு கிடைத்திராத பெருமை சிவகார்த்திகேயனுக்கு கிடைத்துள்ளது!

தமிழில் முன்னணி நடிகர்கள் அஜீத், விஜய்க்கு கிடைத்திராத பெருமை நடிகர் சிவகார்த்திகேயன் படத்துக்கு கிடைத்துள்ளது.

TNN 28 Jun 2017, 5:02 pm
தமிழில் முன்னணி நடிகர்கள் அஜீத், விஜய்க்கு கிடைத்திராத பெருமை நடிகர் சிவகார்த்திகேயன் படத்துக்கு கிடைத்துள்ளது.
Samayam Tamil vijay and ajith whos not got the pride of sivakarthikeyan
அஜீத், விஜய்க்கு கிடைத்திராத பெருமை சிவகார்த்திகேயனுக்கு கிடைத்துள்ளது!


சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘வேலைக்காரன்’ படத்தின் வியாபாரம் பெரும்பாலும் முடிந்துவிட்டது. மேலும் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி பெரும் தொகை கொடுத்து பெற்றுள்ளது. இந்த நிலையில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது குற்றாலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்றுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ஒன்றையும் சன் டிவி வெளியிட்டுள்ளது. படத்தின் பூஜை போட்ட சில நாட்களில் வியாபாரம் தொடங்குவது இன்னும் அஜீத், விஜய் படங்களுக்கே இல்லாத நிலையில் சிவகார்த்திகேயன் படத்துக்கு கிடைத்துள்ளது. இந்த செய்தியை அவருடைய ரசிகர்கள் டுவிட்டரில் பதிவு போட்டு வருகின்றனர்.

இன்னும் பெயரிடாத படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மேலும் படத்தில் நெப்போலியன், சிம்ரன், சூரி, யோகிபாபு, மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், லால் உள்பட பலரும் நடிக்கவுள்ளனர். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்