ஆப்நகரம்

Thalaivi: ஷங்கர் வழியில் செல்லும் விஜய் - 'தலைவி'யுடன் அமெரிக்கா செல்கிறார்

தலைவி பட வேலை தொடர்பாக கங்கனா ரனாவத்தும், இயக்குநர் விஜய்யும் அமெரிக்கா செல்ல உள்ளனர்.

Samayam Tamil 13 Sep 2019, 10:21 am
மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் ஏ. எல். விஜய் தலைவி என்ற பெயரில் படமாக எடுக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது உடல் எடையை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
Samayam Tamil kangana


படப்பிடிப்பு தீபாவளி முடிந்த பிறகு துவங்கும் என்று கூறப்படுகிறது. தலைவி படக்குழு தற்போது கர்நாடக மாநிலம் மைசூரில் இருப்பதாக தயாரிப்பாளர் விஷ்ணு இந்தூரி தெரிவித்துள்ளார்.

தலைவி படத்தில் கங்கனா நான்கு விதமான லுக்கில் வருகிறாராம். அதற்கான ப்ராஸ்தெடிக்கை முடிவு செய்ய விஜய் மற்றும் கங்கனா வரும் 19ம் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு செல்கிறார்களாம்.

தலைவி கெட்டப்புக்காக கேப்டன் மார்வெல், பிளேட் ரன்னர் 2049 உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் வேலை செய்த ஜேசன் கொலின்ஸை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். ப்ராஸ்தெடிக்ஸ் மற்றும் மேக்கப்பிற்கு விஜய் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறாராம். ஜெயலலிதா பற்றிய படம் எந்த குறையும் இன்றி வர வேண்டும் என்று மெனக்கெடுகிறாராம் விஜய்.

வழக்கமாக இது போன்று ப்ராஸ்தெடிக்ஸுக்காக இயக்குநர் ஷங்கர் தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார். இந்நிலையில் விஜய்யும் ஷங்கர் வழியில் செல்கிறார். தலைவி படத்தில் நடிக்க கங்கனாவுக்கு ரூ. 24 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக முன்பு தகவல் வெளியானது.

எப்பொழுது பார்த்தாலும் யாராவது ஒரு பாலிவுட் பிரபலத்தை பற்றி குறை கூறி சர்ச்சையில் சிக்கி வரும் கங்கனாவை தான் ஜெயலலிதாவாக நடிக்க வைக்க வேண்டுமா?. இந்த விஜய்க்கு கங்கனாவை விட்டால் வேறு நடிகையே கிடைக்கவில்லையா என்று விமர்சனம் எழுந்துள்ளது.

படத்தை இயக்கப் போகிறவர் விஜய், யார் சரிபட்டு வருவார், வர மாட்டார் என்று அவருக்கு தெரியாதா என அவரின் ரசிகர்கள் கூறியுள்ளனர். முன்னதாக நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியாக நடிக்க கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்தபோதும் இதே போன்ற பேச்சு தான் எழுந்தது. ஆனால் கீர்த்தி சாவித்ரியாக அருமையாக நடித்து அனைவரையும் அசத்திவிட்டார். அந்த வகையில் கங்கனா நடிப்பு ராட்சசி ஆவார். அதனால் ஜெயலலிதாவாக நிச்சயம் நன்றாகவே நடிப்பார் என்று நம்பலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்