ஆப்நகரம்

ஆர்யா வெளியிட்ட விஜய் ஆண்டனி பட டைட்டில் லுக்: டைட்டிலே வேற லெவல்ல இருக்கே..!

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டைட்டில் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

Samayam Tamil 14 Feb 2022, 5:54 pm
இசை அமைப்பாளராக பல்வேறு அதிரடியான வெற்றிபெற்ற ஆல்பங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் தற்போது நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் விஜய் மில்டன் 'மழை பிடிக்காத மனிதன்' படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil மழை பிடிக்காத மனிதன்
மழை பிடிக்காத மனிதன்


சலீம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய் ஆன்டனி, கோடியில் ஒருவன், திமிருபிடிச்சவன் உள்ளிட்ட படங்களில் எடிட்டராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவர் நடிப்பில் தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி உள்ளிட்ட தயாரிப்பில் உள்ளன.

இந்நிலையில் தற்போது ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன் எழுதி, இயக்கும் ஆக்சன், கமர்ஷியல் படமான 'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. முதல் முறையாக தாமன் & தியூ பகுதியில் படமாக்கப்படும் முதல் தமிழ்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தை கமல் போக்ராவின் இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் தயாரிக்கிறது.

'தலைவர் 169' படத்துக்காக நெல்சன் வைத்த கோரிக்கை: கை விரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம்..!
இந்தப்படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக நடிக்க மேகா ஆகாஷ் நடிக்கிறார். மேலும் சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சுரேந்தர் தாகூர் பிரணிதி ஆகியோரும் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இயக்குநர் ரமணா ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


இந்நிலையில் இந்தப்படத்தின் டைட்டில் லுக் தற்போது வெளியாகியுள்ளது. வித்தியாசமான பட தலைப்புகளால் கவனம் ஈர்க்கும் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' பட டைட்டில் இப்போதே எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த சலீம் படத்தின் தொடர்ச்சியாக இந்தப்படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்