ஆப்நகரம்

சீமானின் விஜய்க்கான கதையில் வேறு நடிகர்!!

இயக்குனர் சீமான் விஜய்க்காக எழுதிய கதையில் தற்போது விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.

TOI Contributor 27 Oct 2017, 2:38 pm
இயக்குனர் சீமான் விஜய்க்காக எழுதிய கதையில் தற்போது விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.
Samayam Tamil vijay antony will act in seemans story not vijay
சீமானின் விஜய்க்கான கதையில் வேறு நடிகர்!!


விஜய் ஆண்டனி முதலில் இசையமைப்பாளராக தனது சினிமா பயணத்தை துவக்கினார். பின்னர் நடிகரானார். அத்துடன், சொந்தமாகப் படங்களைத் தயாரித்தும் வருகிறார். அவர் நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ தமிழிலும், தெலுங்கிலும் மிகப்பெரிய ஹிட்டானது. ஆனால், அதன்பிறகு அவர் நடிப்பில் வெளியான ‘எமன்’ வெற்றி பெறவில்லை. தற்போது ‘அண்ணாதுரை’ மற்றும் ‘காளி’ படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.

தொடர்ந்து, இயக்குனர் சீமான் இயக்கத்தில் ‘பகலவன்’ படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கிறார். இயக்குனர் சீமான் இந்தக் கதையை, விஜய்க்காக பல வருடங்களுக்கு முன்பு தயார் செய்து வைத்திருந்தார். இப்போது அவரது கதையில் விஜய் ஆண்டனி நடிக்கிறார். மேலும் விஜய்யின் சாலிகிராமம் வீட்டில் குடியிருந்த விஜய் ஆண்டனி, சில வருடங்களுக்கு முன்பு அந்த வீட்டையே விலைக்கு வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Antony will act in Seeman’s story not Vijay!!

அடுத்த செய்தி

டிரெண்டிங்