ஆப்நகரம்

Pichaikkaran 2: போடு வெடிய.. 'பிச்சைக்காரன் 2' படத்தின் அதிரடி அப்டேட்: வேறலெவல் சம்பவம்.!

விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள 'பிச்சைக்காரன் 2' படம் குறித்த அதிரடியான அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 28 Apr 2023, 6:56 pm
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி அமோக வரவேற்பினை பெற்ற படம் 'பிச்சைக்காரன்'. இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி ரிலீசுக்கு தயாராகவுள்ளது. சசி இயக்கத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு மொழியில் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்தப்படத்தின் மிரட்டலான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
Samayam Tamil பிச்சைக்காரன் 2
பிச்சைக்காரன் 2


தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக பல ஹிட் ஆல்பம் பாடல்களை கொடுத்தவர் விஜட் ஆண்டனி. இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் நடிகராகவும்,தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் வெற்றிகரமான கலைஞராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான் தற்போது 'பிச்சைக்காரன் 2' படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

கடந்தாண்டு 'பிச்சைக்காரன்' படத்தின் இரண்டாம் பாகத்தை தானே இயக்கி தயாரிக்கவுள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் விஜய் ஆண்டனி. முதல் பாகம் வெளியாகி ஆறு ஆண்டுகள் கழித்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகவிருக்கிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்தது. மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடந்தது

இந்நிலையில் தான் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாரான நிலையில் 'பிச்சைக்காரன் 2' படத்தை வெளியிட தடைக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இதற்கு பதில் மனு தாக்கல் செய்த விஜய் ஆண்டனி, படம் வெளியாவதை தடுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு மன வேதனை அடைந்தேன் என தெரிவித்திருந்தார்.

KH 234: நயன்தாரா, திரிஷாலாம் இல்லை: ஆண்டவருடன் இணையும் அஜித் பட நடிகை.!

இந்நிலையில் 'பிச்சைக்காரன் 2' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் டிரெய்லர் நாளை காலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படமும் மே 19 ஆம் தேதி ரிலீசாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் வைரலாகும் இந்த செய்தியால் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

PS 2: வெற்றிக்கொடி நாட்டினார்களா சோழர்கள்.?: 'பொன்னியின் செல்வன் 2' ட்விட்டர் விமர்சனம்.!

'பிச்சைக்காரன் 2' படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீசாகவுள்ளது. அத்துடன் இந்தப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து காவ்யா தபார், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தன்னுடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் பெரிதான வெற்றியை பெறாத நிலையில் 'பிச்சைக்காரன் 2' படத்தை தான் பெரிதும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.

எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்