ஆப்நகரம்

மாவோவை ரஷ்ய அதிபராகக் குறிப்பிட்டதற்கு நடிகர் விஜய் வருத்தம்

சீனாவை கட்டமைத்த மாவோவை, ரஷ்ய அதிபர் எனக் குறிப்பிட்டதற்காக, நடிகர் விஜய் வருத்தம் தெரிவித்துள்ளார்.

TOI Contributor 22 Mar 2016, 10:12 pm
நவீன சீனாவை கட்டமைத்த மாவோவை, ரஷ்ய அதிபர் எனக் குறிப்பிட்டதற்காக, நடிகர் விஜய் வருத்தம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil vijay asks sorry for remarking mao ze dong as russian president
மாவோவை ரஷ்ய அதிபராகக் குறிப்பிட்டதற்கு நடிகர் விஜய் வருத்தம்


தெறி படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவில் பேசிய இளையதளபதி விஜய், ஒரு குட்டிக்கதை சொன்னார். அதில், சீன கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்தரும், இன்றைய சீனாவின் நிறுவனருமான தோழர் மா சே துங்கை, ரஷ்ய அதிபர் என, தவறுதலாகக் குறிப்பிட்டார். இது பலதரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தனது தவறுக்காக வருத்தம் தெரிவிப்பதாகவும், இனி வரும் நாட்களில் இதுபோன்ற கவனக்குறைவு நிகழாது எனவும், நடிகர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்