ஆப்நகரம்

விஜய் படத்தின் ஷெட்யூல் இம்மாதம் முடிவடைகிறது!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் ஷெட்யூல் இம்மாதத்துடன் முடிவடைவதாக தகவல் வெளியாகியுள்ளன.

TNN 5 Jun 2017, 6:44 pm
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் ஷெட்யூல் இம்மாதத்துடன் முடிவடைவதாக தகவல் வெளியாகியுள்ளன.
Samayam Tamil vijay atlee movie shooting ends this month
விஜய் படத்தின் ஷெட்யூல் இம்மாதம் முடிவடைகிறது!


அட்லீ இயக்கும் பெயரிடப்படாத படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிக்கிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இதில், நித்யா மேனன் சம்பந்தப்பட்டக் காட்சிகளை சென்னை மற்றும் ராஜஸ்தானிலும், காஜல் அகர்வால் சம்பந்தப்பட்டக் காட்சிகளை ஐரோப்பாவிலும் படமாக்கப்பட்டுவிட்டது.

அடுத்து, சமந்தா மட்டும்தான் பாக்கி. தற்போது சிறிய இடைவேளை விட்டிருக்கும் அட்லீ, விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்குகிறார். அதில், விஜய் - சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்கப் போகிறார். அத்துடன், ஷூட்டிங் முடிவடைகிறதாம். அதாவது, இந்த மாத இறுதியுடன் விஜய்யின் ஷெட்யூல் முடிவடைகிறது. அதன்பிறகு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்கிறார்கள்.

Vijay Atlee movie shooting ends this month.

அடுத்த செய்தி

டிரெண்டிங்