ஆப்நகரம்

Vijay Babu: நடிகை பலாத்கார வழக்கு... பிரபல நடிகருக்கு ஆண்மை சோதனை.. பரபரப்பு!

நடிகை பலாத்கார வழக்கில் பிரபல நடிகருக்கு ஆண்மை பரிசோதனை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Samayam Tamil 30 Jun 2022, 1:23 pm
நடிகை பலாத்கார வழக்கில் பிரபல நடிகருக்கு ஆண்மை பரிசோதனை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
Samayam Tamil vijay babu undergoes manliness test
Vijay Babu: நடிகை பலாத்கார வழக்கு... பிரபல நடிகருக்கு ஆண்மை சோதனை.. பரபரப்பு!



நடிகை பலாத்காரம்

மலையாள திரையுலகில் பிரபல நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் விஜய் பாபு. இவரது தயாரிப்பில் நடித்த நடிகை ஒருவர் விஜய் பாபு தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் போதை மருந்து கொடுத்து தன்னை பயன்படுத்திக்கொண்டதாகவும் புகார் அளித்தார்.

குட்டி குஷ்புவா இது... பீச்சில் ஈரத்துணியுடன் ஹன்சிகா... ரணகளப்படுத்தம் போட்டோஸ்!

நடிகர் மறுப்பு

ஆனால் தன் மீதான புகார்களை மறுத்த நடிகர் விஜய் பாபு, பாதிக்கப்பட்ட நடிகையை சமூக வலைதளங்களில் அடையாளப்படுத்தினார். இதனால் அவர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மற்றொர நடிகையும் விஜய் பாபு மீது பாலியல் புகார் கூறினார்.

Meena: ஆசை கணவரின் அஸ்தியை காத்திருந்து பெற்ற மீனா... கையில் பெட்டியுடன்.. வைரலாகும் போட்டோ!

தலைமறைவு

இதையடுத்து விஜய் பாபு மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் விஜய் பாபு வெளிநாட்டிற்கு தப்பியோடி தலைமறைவாகிவிட்டார். தொடர்ந்து விஜய் பாபு சார்பில் முன்ஜாமின் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மவுனமே சிறந்த பதில்

இதையடுத்து விஜய் பாபுவுக்கு சமீபத்தில் நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்டு உடனடியாக விடுவிக்கப்பட்டார். சமூக வலைதளங்களில் மவுனமே சிறந்த பதில் என்றும் நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்ற போவதாகவும் கூறியிருந்தார் விஜய் பாபு.

Meena: அங்கிள் என கதறிய மீனா... வார்த்தையின்றி கலங்கிப்போன ரஜினி!

விசாரணை

தொடர்ந்து விஜய் பாபுவிடம் நான்காவது நாளாக இன்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நடிகையை பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட ஹோட்டல் அறைகள் மற்றும் அவரது வீட்டுக்கு நேரில் அழைத்துச் சென்றும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

Meena: மகன் இல்லாத குறையை தீர்த்த மீனா.. இடுப்பில் துண்டுடன் கணவருக்கு இறுதிச்சடங்கு!

ஆண்மை சோதனை

இதனிடையே நடிகர் விஜய்பாபுவுக்கு ஆண்மை பரிசோதனை செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். ஆண்மை பரிசோதனை இன்று நடைபெறும் என கூறப்படுகிறது. பாலியல் புகாரில் நடிகர் ஒருவருக்கு ஆண்மை பரிசோதனை நடைபெற இருப்பது மலையாள சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Meena: அன்பு கணவரை இறுதியாய் ஆரத்தழுவி முத்தமிட்ட மீனா... கதறி அழுத பிரபலங்கள்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்