ஆப்நகரம்

Beast: இனிமே தான் ஆரம்பமே.. விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் நள்ளிரவு பர்த்டே ட்ரீட்!

நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இன்று நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு பீஸ்ட் திரைப்படத்தின் செகண்ட் லுக்கை வெளியிட உள்ள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Samayam Tamil 21 Jun 2021, 10:59 pm
மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'தளபதி 65'. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாகி இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.
Samayam Tamil Vijay_Beast
Vijay_Beast


விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பெயரை படக்குழுவினர் இன்று மாலை அறிவித்துள்ளனர். பீஸ்ட் என இந்த திரைப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. கையில் துப்பாக்கியை ஏந்தி மெர்சலாக விஜய் நிற்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையம் முழுவதையும் ஆக்கிரமித்துள்ளது. ஏற்கனவே Happy Birthday Anna என்ற ஹேஷ்டாக் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ள நிலையில், தற்போது பீஸ்ட் என்ற ஹேஸ்டாக் உருவாக்கப்பட்டு டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

இதில் விஜய்க்கு நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்காக சென்னையில் அரங்குகள் அமைக்கப்பட்டு வந்தன. ஆனால் அந்த சமயத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமானதால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, படப்பிடிப்புகளுக்கு அனுமதி கொடுத்துள்ளதால் விரைவில் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கதாநாயகனாக அறிமுகமாகும் லாரன்ஸின் தம்பி: வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்நிலையில் இன்று மாலை வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக செகண்ட் லுக் போஸ்டரை இன்று நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர் படக்குழுவினர். இதனால் டபுள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.


இது தொடர்பாக சன் பிக்ஸ்ர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்தை பகிர்ந்து இது இன்னும் முடியலை இனிமே தான் ஆரம்பமே என கேப்சன் கொடுத்துள்ளனர். இதனால் இன்று நள்ளிரவு வெளியாக உள்ள பீஸ்ட் திரைப்படத்தின் செகண்ட் லுக்கிற்கு வெறித்தனமாக காத்திருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்