ஆப்நகரம்

டூப் பயன்படுத்தாமல் பிகிலில் பைக் ஸ்டண்ட்: தளபதி விஜய்யின் வைரல் வீடியோ

பிகில் படத்தின் ஷூட்டிங்கில் விஜய் பைக்கில் ஸ்கிட் செய்த போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.

Samayam Tamil 24 Mar 2020, 5:45 pm
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படம் மிகப்பெரிய ஹிட். அது 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் குவித்ததாக கூறுகின்றனர். அப்பா - மகன் என இரண்டு ரோல்களில் விஜய் நடித்திருந்தார்.
Samayam Tamil Vijays Bigil


இந்த படத்தில் விஜய் டூப் பயன்படுத்தாமல் பைக் ஸ்டண்ட் காட்சியில் நடித்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தான் பயிற்சி கொடுக்கும் பெண்கள் கால்பந்து அணியின் போட்டியில் பிகில் கலந்துகொள்ளாமல் இருக்க அவரை போலீஸ் ஸ்டேஷனில் பிடித்து வைத்திருப்பார்கள். அதன் பின் விஜய் தன் மாஸை காட்டி ஸ்டேஷனில் இருந்து வெளியில் வருவார். அதன் பிறகு விஜய் பைக் எடுத்துக்கொண்டு வேகமாக ஸ்டேடியம் செல்வது போல ஒரு காட்சி இருக்கும்.

அப்படி விஜய் பைக் ஓட்டிக்கொண்டு சென்ற விடியோ தான் தற்போது வைரல் ஆகியுள்ளது. தற்போது மாஸ்டர் அப்டேட் வராததால் விஜய் ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில், இது பைக் ஸ்டண்ட் வீடியோ அவர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.


இது ஒரு புறம் இருக்க விஜய் அடுத்து நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸ் திட்டமிட்டபடி ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸ் ஆகுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. தற்போது கொரோனா காரணமாக சினிமா தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் சொன்னபடி ரிலீஸ் ஆகுமா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

மேலும் 22ம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்பட்ட மாஸ்டர் ட்ரைலரும் வெளிவரவில்லை. அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவுரை மட்டுமே கூறியுள்ளார். படத்தின் ரிலீஸ் அல்லது ட்ரைலர் பற்றி அவர் உட்பட படக்குழுவினர் யாரும் வாய் திறக்கவில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்