ஆப்நகரம்

இணையத்தில் வைரலாகும் விஜய்யின் மகள் திவ்யா சாஷா லேட்டஸ்ட் புகைப்படம்

நடிகர் விஜய்யின் மகள் திவ்யா சாஷாவின் புது புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Samayam Tamil 30 Mar 2020, 5:27 pm
நடிகர் விஜய் தனது ரசிகையாக இருந்த சங்கீதா என்பவரை காதலித்து 1999ல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்கிற மகனும், திவ்யா சாஷா என்கிற மகளும் உள்ளனர்.
Samayam Tamil Vijay with his daughter Divya Saasha in Theri Movie


மற்ற நடிகர்களை போலவே விஜய் எப்போதும் தன் குடும்பம் மீது மீடியா வெளிச்சம் அதிகம் படாமல்பார்த்துக் கொள்கிறார். இருப்பினும் விஜய்யின் மகன் அல்லது மகளின் புகைப்படங்கள் ஏதாவது வெளியாகி இணையத்தில் அடிக்கடி வைரலாகின்றன.

இந்நிலையில் தற்போது திவ்யா சாஷா தனது தோழிகள் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. சாஷா சென்னையில் உள்ள ஒரு சர்வதேச பள்ளியில் படித்து வருகிறார். அவரது பள்ளி தோழிகள் உடன் எடுத்த புகைப்படம் தான் அது.


சில வாரங்கள் முன்பு விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது நண்பர்கள் முன்பு நடனமாடிய வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி இருந்தது. அவர் விஜய் போலவே வேகமாக நடனம் ஆடுகிறார் என அந்த விடியோவை பார்த்து பலரும் ஆச்சர்யத்துடன் பதிவிட்டனர்.

விஜய் தற்போது நடித்து முடித்துள்ள மாஸ்டர் படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. ஏப்ரல் ஏப்ரல் 9ம் தேதி படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில் அது கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதிய ரிலீஸ் தேதி என்ன என்பது கொரோனா லாக்டவுன் முடிந்தபிறகு தான் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் இந்த படத்திற்கு பிறகு விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்