ஆப்நகரம்

Vijay Devarakonda Marriage Rumor : சூப்பர் ஸ்டார் குடும்பத்தில் மாப்பிள்ளையாகப் போகும் விஜய்!?

நடிகர் விஜய் தேவரகொண்டா, தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி மகள் நடிகை நிஹாரிகாவை திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 26 Mar 2019, 3:14 pm
‘அர்ஜுன் ரெட்டி’ என்ற படம் மூலம் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. அதையடுத்து இவர் தமிழில் ‘நோட்டா’ என்ற படத்தில் நடித்தார். தற்போது நடிகர் விஜய்யும், நடிகர் சிரஞ்சீவி தம்பி மகள் நிஹாரிகாயும் ஒருவரையொருவர் காதலித்து வருவதாகவும் விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Samayam Tamil vijay-devarakonda


நடிகர் சிரஞ்சீவியின் தம்பி வருண் தேஜ், இவரது மகள் நிஹாரிகா. இவர் தமிழில் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமாகியுள்ளார்.

விஜய் தேவரகொண்டாவோ, நிஹாரிகாவோ தங்களின் காதலை உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் இவர்களின் திருமணம் பற்றிய வெளியான தகவல் உண்மை இல்லை அவர்களின் குடும்பத்தினர் கூறி உள்ளனர்.

நிஹாரிகா என் தங்கை போன்றவர் என நாயகன் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். மேலும் வேகமாக பரவி வரும் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளியும் வைத்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்