ஆப்நகரம்

விஜய் தேவரகொண்டா நடிக்கும் படம் ‘நோட்டா’!

ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ள படத்திற்கு ‘நோட்டா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 9 Mar 2018, 8:16 pm
ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ள படத்திற்கு ‘நோட்டா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
Samayam Tamil vijay devarakondas news movie name announced
விஜய் தேவரகொண்டா நடிக்கும் படம் ‘நோட்டா’!


தெலுங்கில் வெளியான ‘அர்ஜூன் ரெட்டி’ பட ஹீரோ விஜய் தேவரகொண்டா தமிழில் முதன்முறையாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அவர் நடிக்கவுள்ள தமிழ்ப்படத்தின் தலைப்பு அறிவிப்பு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த படத்திற்கு ‘நோட்டா’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு முழு நீள அரசியல் படமாக உருவாகவுள்ளது.

இந்த ‘நோட்டா’ படத்தை ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த்சங்கர் இயக்கும் மூன்றாவது படமாகும். இந்த படத்தில் விஜய்தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடிகை மெஹ்ரீன் நடிக்கவுள்ளார். படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். இந்தப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்