ஆப்நகரம்

துணி போதும், மருத்துவ மாஸ்க் வேண்டாம்: விஜய் தேவரகொண்டா அறிவுரை

மக்கள் அனைவரையும் மாஸ்க் அணியும்படி நடிகர் விஜய் தேவரகொண்டா கேட்டுக்கொண்டுள்ளார்.

Samayam Tamil 7 Apr 2020, 7:01 pm
கொரோனா வைரஸ் மற்றவர்களிடம் இருந்து நமக்கு பரவாமல் தடுக்க மாஸ்க் அணிவது கட்டாயம் என அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும் அடிக்கடி சோப்பு போட்டு கையை கழுவுவது கட்டாயம் என்றும் கூறப்பட்டுள்ளது.
Samayam Tamil Vijay Devarakonda advices everyone to wear Mask


இன்று மட்டும் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு புதிதாக இருப்பவர்கள் 69 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளது.

இது மேலும் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக வெளியில் செல்லும் போது நிச்சயம் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இது பற்றி பல்வேறு பிரபலங்களும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். பல நடிகர்கள் வீடியோ வெளியிட்டு ரசிகர்களிடம கோரிக்கை வைத்துள்ளனர்.

அந்த வரிசையில் தற்போது நடிகர் விஜய் தேவரக்கொண்டா ட்விட்டரில் மக்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். "முகத்தை துணியால் மூடியிருந்தால் நோய் பரவுவது குறையும். மருத்துவ மாஸ்குகளை பயன்படுத்தாமல் அதை மருத்துவர்களுக்கு செல்லவிடுங்கள். ”

”கைக்குட்டை, ஸ்கார்ப் அல்லது அம்மாவின் துப்பட்டா போன்றவற்றை மாஸ்க்குகளாக பயன்படுத்துங்கள்" என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்