ஆப்நகரம்

இந்த 2 ஹீரோயின்கள் கூட நடிச்சே ஆகணும்.. விஜய்யின் ஆசை

முன்னணி தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தனக்கு இரண்டு பாலிவுட் நடிகைகளுடன் ஜோடி சேர ஆசை என கூறியுள்ளார்.

Samayam Tamil 23 Mar 2020, 11:17 am
தென்னிந்திய சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்திவந்த விஜய் தேவரகொண்டா தற்போது ஹிந்தி சினிமா பக்கம் தன் கவனத்தை திருப்பியுள்ளார்.
Samayam Tamil Vijay Deverakonda


தெலுங்கில் இவர் நடித்திருந்த அர்ஜுன் ரெட்டி படத்தினை ஹிந்தியில் கபீர் சிங் என்ற பெயரில் ரிமேக் செய்து 2019 ஜூனில் திரைக்கு வந்தது. அந்த படம் வெளியான சமயத்தில் படத்தின் கதை பற்றி பெண்ணியவாதிகள் பலர் கடும் விமர்சனம் செய்தனர்.

தற்போது விஜய் தேவரகொண்டா ஒரு நேரடி ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் ஃபைட்டர் என்ற படத்தில் நடிக்கிறார் அவர். அதில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடிக்கிறார்.

இந்நிலையில் விஜய் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனக்கு மேலும் இரண்டு முக்கிய பாலிவுட் ஹீரோயின்களுடன் நடிக்க ஆசை என கூறியுள்ளார்.

"நான் எந்த பாலிவுட் ஹீரோயின் உடனும் நடிக்க தயாராக இருக்கிறேன். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நான் கியாரா அத்வானி மற்றும் ஜான்வி கபூர் உடன் பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். நல்ல நடிகையாக இருந்தால் யாருடனும் நடிக்க ஒப்புக்கொள்வேன். எந்த சினிமா துறையாக இருந்தாலும் சரி எனக்கு அது பிரச்சனை இல்லை" என கூறியுள்ளார் அவர்.

இது ஒருபுறமிருக்க தற்போது கொரோனா காரணமாக எந்த படங்களின் ஷூட்டிங்கும் நடைபெறாமல் உள்ளது. அதனால் வீட்டிலேயே தன் குடும்பத்தினருடன் நேரம் செலவழித்து வருகிறார் விஜய் தேவரகொண்டா தன் தம்பி ஆனந்த் உடன் வீட்டில் செஸ் விளையாடும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்