ஆப்நகரம்

விஜய் கொடுத்த 5 ஆயிரத்தை அஜித் ரசிகருக்கு கொடுத்து உதவிய தளபதி ரசிகர்

விஜய் அளித்த பணத்தை அவரின் ரசிகர் ஒருவர் அஜித் ரசிகருக்கு கொடுத்து உதவியது பலரையும் வியக்க வைத்துள்ளது.

Samayam Tamil 27 Apr 2020, 11:09 am
அஜித்தும், விஜய்யும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் மட்டும் அல்லாது அவர்களின் குடும்பத்தாரும் நட்புடன் பழகி வருகிறார்கள். ஆனால் அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே எப்பொழுதுமே பிரச்சனை தான்.
Samayam Tamil vijay


ட்விட்டரில் அவர்கள் சண்டை போட்டுக் கொள்ளாத நாளே இல்லை எனலாம். சின்னச் சின்ன விஷயத்திற்கு எல்லாம் மோதிக் கொள்வார்கள். அதே சமயம் பிரச்சனை என்று வந்தால் யாரும் எதிர்பாராவிதமாக ஒன்று சேர்ந்து விடுவார்கள்.

இந்நிலையில் தான் அந்த அதிசயம் நடந்துள்ளது. கொரோனா லாக்டவுனால் கஷ்டப்படும் தனது ரசிகர்கள் பலருக்கு தலா ரூ. 5 ஆயிரம் நிதி கொடுத்துள்ளார் விஜய் என்பது அனைவருக்கும் தெரியும்.

மதுரையை சேர்ந்த நாகராஜ் என்கிற விஜய் ரசிகருக்கும் அந்தி நிதி கிடைத்துள்ளது. அவர் அந்த 5 ஆயிரம் ரூபாயையும் தனது நண்பரான அஜித் ரசிகர் சசிகுமாருக்கு கொடுத்து உதவியுள்ளார். நாகராஜ் மாற்றுத்திறனாளியான சசிகுமாருக்கு உதவியபோது எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

விஜய் ரசிகர் ஒருவர் அஜித் ரசிகருக்கு உதவி செய்துள்ளார் என்று பிற நடிகர்களின் ரசிகர்கள் வியப்புடன் அந்த புகைப்படத்தை ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மதுரைக்காரங்க பாசக்காரங்க என்பதை நிரூபித்துவிட்டார் என மதுரையை சேர்ந்தவர்கள் பெருமை அடைந்துள்ளனர்.

நாய்க்கு பிரபாகரன் பெயர், கேலி காட்சி: தமிழர்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர்

அடுத்த செய்தி

டிரெண்டிங்