ஆப்நகரம்

Vijay: அடேங்கப்பா, தளபதி 68 படத்தில் நடிக்க விஜய்க்கு ரூ. 150 கோடியா?!

Thalapathy 68 update: வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க விஜய்க்கு ரூ. 150 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Authored byஷமீனா பர்வீன் | Samayam Tamil 17 May 2023, 10:28 am
Vijay salary for Thalapathy 68: தளபதி 68 படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட விஜய்க்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது.
Samayam Tamil vijay gets rs 150 crore to act in thalapathy 68 to be directed by venkat prabhu
Vijay: அடேங்கப்பா, தளபதி 68 படத்தில் நடிக்க விஜய்க்கு ரூ. 150 கோடியா?!


​லியோ​

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார் விஜய். அந்த பட ஷூட்டிங்கே இன்னும் முடியாத நிலையில் விஜய்யின் அடுத்த படமான தளபதி 68 பற்றி பேசப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக சமூக வலைதளங்களில் தளபதி 68 பற்றி தான் பேச்சாக இருக்கிறது. #Thalapathy68 என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தினமும் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

மன்சூர் அலி கான்

​ரூ. 150 கோடி​

தளபதி 68 படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்க, கோபிசந்த் மலினேனி இயக்குவார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது எல்லாமே மாறிவிட்டது. வெங்கட் பிரபு இயக்க ஏ.ஜி.எஸ். நிறுவனம் தான் தளபதி 68 படத்தை தயாரிக்கவிருக்கிறதாம். தளபதி 68 படத்தில் நடிக்க விஜய்க்கு ரூ. 150 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம். அடேங்கப்பா, ரூ. 150 கோடியா என ரசிகர்கள் வியந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Varun Tej: நடிகை லாவண்யாவுக்கும், மெகா குடும்பத்து வாரிசு நடிகருக்கும் ஜூனில் நிச்சயதார்த்தம்

​வெங்கட் பிரபு​

தளபதி 68 படத்தை கோபிசந்த் இயக்குவதாக இருந்த நிலையில் வெங்கட் பிரபு எப்படி வந்தார் என்கிற கேள்வி பலருக்கும் எழுந்தது. அண்மையில் விஜய்யை சந்தித்த வெங்கட் பிரபு ஒன் லைனர் சொன்னாராம். அது விஜய்க்கு பிடித்துப் போக, நாம் சேர்ந்து படம் பண்ணுவோம் ப்ரோ என்றாராம். இதையடுத்தே தளபதி 68 கூட்டணி கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவானதாம்.

​யுவன்​

வெங்கட் பிரபு இயக்கினால் அந்த படத்திற்கு அவரின் தம்பி யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பார். இந்நிலையில் தான் தளபதி 68 படத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார். தளபதிக்காக மாஸா ஒரு பிஜிஎம் போடுங்க சின்ன பாய் என விஜய் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர் நிச்சயம் மெர்சலா ஒரு பிஜிஎம் போடுவார் என நம்புவோமாக.

​தளபதி 68​

ஒன்லைனர் தான் சொல்லியிருக்கிறார் வெங்கட் பிரபு. அதனால் ஃபைனல் ஸ்க்ரிப்ட்டை தயார் செய்ய நேரம் எடுக்கும். தளபதி 68 படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே லியோ பட வேலையை முடித்துவிடுவார் விஜய். லியோ படத்தை அக்டோபர் மாதம் 19ம் தேதி ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள்.

Jyothika: மும்பையில் செட்டிலான கையோடு ஜோதிகாவுக்கு அடித்த ஜாக்பாட்: இது ஆரம்பம் தான்


​விஜய்​

கையில் இருக்கும் பட வேலை முடியாமல் அடுத்த படம் குறித்து பேச மாட்டார் விஜய். அதனால் லியோ பட வேலை முடியும் வரை தளபதி 68 பற்றி பேச மாட்டார். இதற்கிடையே தளபதி 68 படத்தை கோபிசந்த் மலினேனி இயக்கவில்லை என்பதை நினைத்து விஜய் ரசிகர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். கோபிசந்த், விஜய் கூட்டணி செட்டாகாது. விஜய்ணா ஸ்டைல் வேறு, கோபிசந்த் ஸ்டைல் வேறு. கோபிசந்த் இயக்கத்தில் நடிக்க வேண்டாம்ணா என ரசிகர்கள் கூறி வந்தார்கள். இந்நிலையில் தான் வெங்கட் பிரபு வந்திருக்கிறார்.

​கோரிக்கை​

விஜய்யின் ரசிகரான வெங்கட் பிரபு நிச்சயம் மாஸாக ஒரு படம் கொடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. விஜய்ணாவுக்கு காமெடி சூப்பராக வரும். அதனால் உங்கள் படத்தில் அவரை காமெடி செய்ய வைக்கவும் என ஏற்கனவே கோரிக்கை எழுந்திருக்கிறது. மேலும் க்யூட் காதல் டிராக் வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


எழுத்தாளர் பற்றி
ஷமீனா பர்வீன்
டிஜிட்டல் ஊடகத்தில் தமிழ் சமயம் ஊடகத்தில் சினிமா செய்திகளை அளித்து வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். முன்னதாக நாட்டு நடப்பு, லைஃப்ஸ்டைல், ஸ்போர்ட்ஸ் செய்திகள் அளித்தவர்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்