ஆப்நகரம்

விஜய் ஒரு சிறந்த அரசியல்வாதி: எஸ்.ஏ.சந்திரசேகர்!

விஜய்க்கு நன்றாக அரசியல் தெரியும் என்று நடிகரும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.

Samayam Tamil 20 Jun 2018, 3:56 pm
விஜய்க்கு நன்றாக அரசியல் தெரியும் என்று நடிகரும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.
Samayam Tamil Vijay lead.


நடிகரும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘டிராபிக் ராமசாமி’ என்ற படத்தில் டிராபிக் ராமசாமி வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை அவரது உதவியாளர் விக்கி என்பவர் இயக்கியுள்ளார். இந்தப் படம் நாளை மறுநாள் (ஜூன் 22ம் தேதி) திரைக்கு வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் புரோமோஷனுக்காக படக்குழு தற்போது மீடியாக்களுக்கு பேட்டி அளித்து வருகிறது. அந்த வகையில் படத்தின் நாயகன் எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- “அரசியல் படங்களில் ரஜினி நடித்த ‘காலா’ படத்தை விட விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் சிறந்த படம். தன்னை விட விஜய்க்கு நன்றாக அரசியல் தெரியும். மேலும் அவர் சிறந்த அரசியல்வாதி” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்