ஆப்நகரம்

Sarkar Teaser: நாளை வெளியாகிறது ‘சர்கார்’ படத்தின் டீசர்!!

விஜய் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருக்கும் 'சர்கார்' படத்தின் டீசர், விஜய தசமி தினமான அக்டோபர் 19 ஆம் தேதியன்று வெளியாகிறது.

Samayam Tamil 18 Oct 2018, 2:47 pm
நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகி உள்ள சர்கார் படத்தின் டீசர், நாளை (அக்டோபர் 19 ஆம் தேதி) மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது.
Samayam Tamil நாளை வெளியாகிறது ‘சர்கார்’ படத்தின் டீசர்!!
நாளை வெளியாகிறது ‘சர்கார்’ படத்தின் டீசர்!!


தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உள்ள நடிகர் விஜய், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘சர்கார்’ படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, ராதா ரவி உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. மிகவும் பிரம்மாண்டமாக நடந்த இந்த இசைவெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் அரசியல் பற்றி தெரிவித்தக் கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாக மாறியது.

இதையடுத்து, படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த நிலையில், படத்தின் டீசர் விஜயதசமி பண்டிகையான, அக்டோபர் 19 ஆம் தேதி, மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

அந்த வகையில், சர்கார் படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாவதால், டீசர் எப்படி இருக்கும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்