ஆப்நகரம்

விஜய்யின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு பிரான்ஸில்!

விஜய்யின் 61வது படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு பிரான்ஸ் நாட்டில் நடைபெறவுள்ளது.!

TNN 22 Mar 2017, 4:31 pm
விஜய்யின் 61வது படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு பிரான்ஸ் நாட்டில் நடைபெறவுள்ளது.!
Samayam Tamil vijay next round shooting in france
விஜய்யின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு பிரான்ஸில்!


அட்லீ இயக்கத்தில் விஜய் தன்னுடைய 61வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். படத்தில் நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா உட்பட மூன்று நாயகிகள் நடிக்கிறார்கள். மேலும் படத்தில் சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு உட்பட பல நடிகர்களும் நடிக்கிறார்கள்.

சென்னையில் தற்போது நடந்துவரும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் 80களில் நடக்கும் விஷயங்கள் படமாக்கப்பட்டு வருகிறது. இன்னும் 10 நாளில் இப்படப்பிடிப்பு முடியும் என கூறப்படுகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு படக்குழு பிரான்ஸ் செல்ல முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு நடுவில் இப்படத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி படக்குழுவை சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்