ஆப்நகரம்

மாஸ்டரில் ஒன்னு இல்ல இரண்டு விஜய்யா?

மாஸ்டர் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 28 Apr 2020, 12:11 pm
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சந்தனு பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மாஸ்டர். கொரோனா வைரஸ் பிரச்சனை மட்டும் ஏற்படாமல் இருந்திருந்தால் கடந்த 9ம் தேதி மாஸ்டர் வெளியாகியிருந்திருக்கும்.
Samayam Tamil vijay


இந்நிலையில் மாஸ்டர் படத்தில் விஜய் இரட்டை வேடகங்களில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் அவ்வளவு சீக்கிரத்தில் படம் குறித்த விஷயங்களை கூற மாட்டார் என்று தெரியும். ஆனால் அதற்காக இரட்டை கதாபாத்திர விஷயத்தை மூடி மறைப்பார் என்று எதிர்பார்க்கவில்லையே என்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

ஒரு விஜய்யை பார்த்தாலே ரசிகர்கள் செம ஹேப்பியாகிவிடுவார்கள். இந்நிலையில் இரண்டு விஜய் என்றால் அவர்களின் சந்தோஷத்தை பற்றி சொல்லவா வேண்டும். இருப்பினும் இந்த தகவலை லோகேஷ் கனகராஜ் உறுதி செய்யும் வரை நம்ப முடியாது.

முன்னதாக அட்லி இயக்கத்தில் நடித்த பிகில் படத்தில் விஜய் அப்பா, மகனாக வந்து அசத்தினார். அதே மாதிரி மாஸ்டர் படத்திலும் இரண்டு விஜய் இருந்தால் மாஸாகத் தான் இருக்கும்.

ஊரடங்கு உத்தரவு வரும் மே மாதம் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது மேலும் நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் மாஸ்டர் ரிலீஸை பற்றி கவலைப்படாமல் விஜய்யின் பிறந்தநாளை தற்போதில் இருந்தே கொண்டாடத் துவங்கிவிட்டார்கள் ரசிகர்கள். அதனால் ட்விட்டர் சும்மா அதிர்ந்து கொண்டிருக்கிறது.

Prasanna பிரபாகரன் சர்ச்சை: துல்கர் சல்மானிடம் மன்னிப்பு கேட்ட பிரசன்னா

அடுத்த செய்தி

டிரெண்டிங்