ஆப்நகரம்

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நடிக்கும் விஜய்!?

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் நடிக்கவுள்ளார் நடிகர் விஜய் தேவர்கொண்டா.

TNN 14 Dec 2017, 2:05 pm
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் நடிக்கவுள்ளார் நடிகர் விஜய் தேவர்கொண்டா.
Samayam Tamil vijay plays tamil and telugu in two languages
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நடிக்கும் விஜய்!?


தமிழில் ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கியவர் ஆனந்த் ஷங்கர். இவர் அடுத்ததாக யாருடன் கூட்டணி அமைப்பார் என்று பலரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் இந்த வருட சென்சேஷன் என்றால் அர்ஜுன் ரெட்டி தான், இப்படத்தை தெலுங்கு சினிமா தலையில் தூக்கி கொண்டாடியது.

இதில் ஹீரோவாக நடித்திருந்தவர் விஜய் தேவரகொண்டா, இவர் தற்போது பல படங்களில் கமிட் ஆகிவருகின்றார். அந்த வகையில் அடுத்து ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது, இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகவுள்ளதாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்