ஆப்நகரம்

சா்காா் படத்திற்கு தடை? உயா்நீதிமன்றத்தில் நாளை விசாரணை

சா்காா் படத்தில் இடம்பெற்றுள்ள கதை தன்னுடையது என்று ராஜேந்திரன் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

Samayam Tamil 24 Oct 2018, 8:20 pm
சா்காா் படத்திற்கு தடை கோாி தொடரப்பட்ட அவசர வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.
Samayam Tamil Sarkar Vijay


முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் சா்காா். படத்தின் தலைப்பு தொடங்கி படல் வரை அனைத்துமே சா்ச்சையிலேயே நகா்ந்த வண்ணம் உள்ளது. தற்போது கூடுதலாக ஒரு சா்ச்சை இதில் இடம் பெற்றுள்ளது. முன்னதாக படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டா் வெளியான போது அதில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இதற்கு அமைச்சா் ஜெயக்குமாா், முன்னாள் மத்திய அமைச்சா் அன்புமணி உள்ளிட்டோா் எதிா்ப்பு தொிவித்தனா்.

அதன் பின்னா் நடைபெற்ற பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகா் விஜய் அரசியல் தொடா்பான பல வசனங்களை முன்வைத்தாா். விஜய்யின் பேச்சுக்கு தமிழக அமைச்சா்கள் பலரும் கருத்து தொிவித்தனா்.

இந்நிலையில் தனது கதையை திருடி சா்காா் படத்திற்கு பயன்படுத்தியதாக வருண் என்ற ராஜேந்திரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தொடா்ந்துள்ளாா்.

அந்த மனுவில், “செங்கோல்” என்ற தலைப்பில் தான் தனது கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளா் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருந்தததாகவும், அந்தக் கதையை திருடி சா்காா் என்ற தலைப்பில் ஏ.ஆா்.முருகதாஸ் படம் இயக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படத்தை வெளியிடக் கூடாது. படத்தின் டைட்டிலில் தன்னுடைய பெயரைச் சோ்க்க வேண்டும். அப்படி வெளியிட்டால் ரூ.30 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்த வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் நாளை (வியாழன் கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்