ஆப்நகரம்

ஆட்டோ டிரைவராக மாறிய விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் ‘மாமனிதன்’ படத்தில் அவர் ஆட்டோ டிரைவராக நடிக்கிறாராம்.

Samayam Tamil 29 Dec 2018, 3:00 pm
‘தர்மதுரை’ வெற்றிப் படத்தை படத்தை அடுத்து, தற்போது சீனு ராமசாமி, நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ‘மாமனிதன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் துவங்கியது. இந்நிலையில், படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் தர்மதுரை படத்தில் நடித்தது போல இந்த படத்திலும் விஜய் சேதுபதி கலகலப்பான, அமைதியான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.
Samayam Tamil maamanithn


இந்த படத்திற்கு இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா என மூன்று பேரும் இணைந்து இசையமைக்கிறார்கள். இளையராஜா குடும்பத்தில் உள்ள இசையமைப்பாளர்கள் மூன்று பேரும் ஒரே படத்திற்கு இசையமைப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்