ஆப்நகரம்

தென்னாப்ரிக்காவுக்கு பறந்த விஜய் சேதுபதி..!

கே.வி.ஆனந்த் இயக்கிவரும் ‘தேவ் ‘ படத்தின் படப்பிடிப்பிற்காக தென்னாப்ரிக்காவுக்கு சென்றுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

TNN 22 Sep 2016, 11:07 am
கே.வி.ஆனந்த் இயக்கிவரும் ‘தேவ் ‘ படத்தின் படப்பிடிப்பிற்காக தென்னாப்ரிக்காவுக்கு சென்றுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
Samayam Tamil vijay sethupathi in south africa for dev shooting
தென்னாப்ரிக்காவுக்கு பறந்த விஜய் சேதுபதி..!


காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆண்டவன் கட்டளை திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் நாளை வெளியாக உள்ளது.ஏற்கனவே தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் விஜய் சேதுபதிக்கு இந்த படமும் ச வெற்றியடையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தனது பட வெளியீடு குறித்து பற்றியெல்லாம் கவலைப்படாமல், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகிவரும் ‘தேவ்’ படத்தின் படப்பிடிப்பிற்காக தென்னாப்ரிக்காவுக்கு சென்றுவிட்டார் விஜய் சேதுபதி.இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் ,இயக்குநர் விஜய.டி.ராஜேந்திரனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.கதாநாயகியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார்.

விஜய் சேதுபதி ,லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘றெக்கை’ திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்